Kogilavani / 2011 ஜூன் 08 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது இருப்பதற்கான உறுதியான பொறிமுறைகளை ஏற்படுத்த இரு நாடுகளின் கடற்படைகளும் தீர்மானித்துள்ளன.
இந்திய, இலங்கை கடற்படைகள், இந்திய கரையோர பாதுகாப்பு படை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இலங்கையின் கப்பல் ஒன்றில் நடைபெற்றது.
45 நாள் மீன்பிடித்தடையின் பின்னர் மீன்பிடிக்க ஆரம்பித்து ஒரு வாரத்தின் பின் இக் கூட்டம் நடந்துள்ளது. இரண்டு நாட்டு கடற்படைகளுக்குமிடையில் உறவுகளை பலப்படுத்துவதே இக்கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. இதன்போது, யுத்தத்தின் பின் இலங்கையில் ஏற்பட்ட நிலைமை, பாதுகாப்பு சவால்கள், அத்துமீறல், கடல் சட்டங்களை மீறுதல் போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டன.
கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான திகதி அரசாங்கங்களால் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையாயினும் அது ஜீன் அல்லது ஜீலை மாதத்தில் தொடங்கலாம் என கூறப்படுகின்றது.
29 minute ago
44 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago
51 minute ago