2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பிரித்தானிய விஸா விதிகளில் மாற்றம் வருகிறது

Super User   / 2011 ஜூன் 10 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தற்காலிக விஸாவில் பிரிட்டனுக்கு வருபவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க முடியாதவாறு  குடிவரவு திருத்தங்களுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

விஸா தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பதை வகைப்படுத்துவதற்கும் பிரிட்டனில் தங்க விரும்புவர்களுக்கு கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துவதற்குமான யோசனைகைள பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீன் முன்வைத்துள்ளார்.
குடியேறலுக்கு வழியமைக்கும் தொழில்வாய்ப்புகளின் மீளாய்வு தொடர்பான பொதுக் கலந்துரையாடலொன்றை ஆரம்பித்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்காலிக மற்றும் நிரந்தர குடிவரவுக்கான தொடர்பை முறிப்பதை இந்த யோசனைகள் இலக்காக கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

தற்போதைய முறைகைளின் வீழ் பெரும்பாலான ஊழியர்கள் பிரிட்டனில் நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 2010 ஆம் ஆண்டில்,  தொழிலுக்காக பிரிட்டனுக்கு வந்தவர்களில் 84,000 பேர் நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட்டனர். 1997 ஆம் ஆண்டில் 10,000 இற்கு குறைவானோரே தொழில்வாய்ப்பு தொடர்பான குடியேற்றத்திறகு தகுதி பெற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .