2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஐ.நா.விடம் தொழிற்சங்க ஒன்றியங்கள் முறைப்பாடு

Kogilavani   / 2011 ஜூன் 13 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொழிற்சங்கங்கள் மீது அரசாங்கம் விதிக்கும் கட்டுபாடுகள் மற்றும் தலையீடுகள் குறித்த விடயங்களடங்கிய முறைப்பாட்டுக் கடிதமொன்றை ஐ.நாவுக்கு ஆடைத்தொழிற்துறை மற்றும், சுகாதார துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அனுப்பியுள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கோ வேலை நிறுத்தம் செய்வதற்கோ உரிய அடிப்படை உரிமைகள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதுடன் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் செய்வதனைத் தடுக்கும் நடவடிக்கையானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) உடன்படிக்கைகள் கொள்கைகளை மீறுவதாக  உள்ளதெனவும் தொழிற்சங்க அமைப்புகள் கூறியுள்ளன.

சுகாதார சேவை தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் துஷார இலங்ககோன், தொழிங்சங்க கூட்டுச்சம்மேளனத்தின் அன்டன் மார்க்கஸ், தாதியர் உத்தியோகஸ்தர் சங்கத்தின் சமன் ரத்னபிரிய ஆகியோர் எழுதிய இக்கடிதத்தில், தொழிற்சங்கங்களுக்கு எதிரான பாகுபாடுகளை நிறுத்த அரசாங்கத்தை வலியுறுத்துமாறு ஐ.எல்.ஓ.பணிப்பாளர் நாயகத்தை கோரியுள்ளனர்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X