2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக ஆஸி செல்வோரை கண்டுபிடிக்க விமான நிலையத்தில் விசேட உத்தியோகஸ்தர்கள்

Super User   / 2011 ஜூன் 15 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

சட்டத்துக்குப் புறம்பான குடியேற்றத்தையும் மனித கடத்தலையும் தடுப்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட உத்தியோகத்தர்களை நிறுத்தவுள்ளதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

இலங்கையிலிரந்து விமானம் மூலம் பிழையான வழிகளில் அவுஸ்திரேலியா செல்லவுள்ள பயணிகளை கண்டுபிடித்து நிறுத்துவதற்கான கூட்டு முயற்சியில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கெத்தி குளுக்மன் டெய்லி மிரருக்கு கூறினார்.

'படகுகள், கப்பல்கள் மூலமாக மட்டுமன்றி விமானம் மூலமாகவும் பலர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வேறு  நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கின்றனர். இந்நிலையில் பிராந்தியத்திலுள்ள நாடுகள் குடிவரவு மோசடிகளையும் கள்ளத்தனமான விமான பயணத்தையும் கண்டுபிடிப்பதில் தம்மிடையே ஒத்துழைப்பை அதிகரித்துள்ளன' என அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .