Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 20 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ ஜயசேகர)
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்களின் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள், பொலிஸ் ஆணைக்குழு தொழிற்படாத காரணத்தால் கவனிக்கப்படாமல் குவிந்து கிடப்பதாக பொலிஸ் ஆணைக்குழு சார்பில் தகவல் தரவல்ல ஒருவர் கூறினார்.
18ஆவது திருத்தத்தின் பின் பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரம் மிகவும் குறைக்கப்பட்டு விட்டது. ஆணைக்குழுவிடமிருந்து பல அதிகாரங்கள் பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கும் பொலிஸ் மாஅதிபருக்கும் மாற்றப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் திகதியுடன் ஆணையாளர்களின் பதவி முடிவுக்கு வந்ததுடன், ஏனைய முன்னைய தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயலிழந்துவிட்டதாக ஆரியதாஸ குரே குறிப்பிட்டார்.
18ஆவது திருத்தத்தின்படி, பொலிஸ் கான்ஸ்டபிளிலிருந்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் வரையிலான சகல பொலிஸ் ஊழியர்களினதும் நிர்வாகம் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
உதவி பொலிஸ் அத்தியட்சர்களிலும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பவை மட்டுமே பொலிஸ் ஆணைக்குழுவின் பொறுப்பில் உள்ளதென அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago