2021 ஏப்ரல் 17, சனிக்கிழமை

சுதந்திர வர்த்தக வலய தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் : ஐ.தே.க.

Super User   / 2011 ஜூன் 21 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மஹாநாம திலரகட்ன ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை  பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு இச்சம்பவத்திற்குப் பொறுப்பானர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

"காலத்துக்கு காலம் பல்வேறு நோக்கங்களுடன் அரசாங்கம் ஆணைக்குழுக்களை நியமித்தது. ஆனால் அந்த ஆணைக்குழுக்கள் கண்டறிந்த விடயங்களும் சிபாரிசுகளும் கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. இந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படாமலிருக்க முடியாது" என திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

அத்துடன்  குற்றவாளிகளாக காணப்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் இந்நிலையில் பல்வேறு அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். மோசடியொன்றில் குற்றவாளியாக காணப்பட்ட அதிகாரியொருவருக்கு தண்டனையளிப்பதற்கு பதிலாக பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .