Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 ஜூன் 21 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
ரஷ்யாவுக்கான விஜயத்தின் மூலம் உலக நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டியதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.
ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் பற்றி விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இதில் ஜனாதிபதியுடன் ரஷ்யவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரலும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,
"ரஷ்ய விஜயத்தின் போது அங்கு சந்திப்பு ரஷ்ய ஜனாதிபதி, சீன ஜனாதிபதி மற்றும் ஸ்பெயின் பிரதமர் ஆகியோருடன் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் போன்ற விடயங்களிலும் இத்தலைவர்களுடன் பேச்சு நடத்த முடிந்தது.
பயங்கரவாதம் இலங்கையில் மாத்திரம் இருந்த ஒன்றல்ல. இந்த பயங்கரவாத பிரச்சினையை ரஷ்யாவும் எதிர்நோக்கின்றது. யுத்தத்தை நிறைவுசெய்துள்ள இலங்கைக்கு ரஷ்யா முழு ஆதரவையும் வழங்கும். இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் வெளிநாட்டு சக்திகள் தலையிட முடியாது. இதற்கு அனுமதிக்கவும் முடியாது என ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமான நேரடி விமான சேவை செப்டம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனூடாக பல ரஷ்ய கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்யமுடியும்.
இந்த விஜயத்தின் போது ரஷ்யாவின் கெஸ்புரேம் எனும் வாயு உற்பத்தி நிலைய பிரதிநிதிகளை சந்தித்து போது இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவில் இலங்கைத் தேயிலைக்கு நல்ல சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது பேச்சு நடத்தப்பட்டது" என தெரிவித்தார்.Pix By:Nisal Baduge
Muslim Wednesday, 22 June 2011 09:39 PM
well done mr President
Reply : 0 0
NAKKIRAN Friday, 24 June 2011 02:36 PM
பலே ஆசாமி .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago