Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 22 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
தகவல் சுதந்திரத்தை தற்போதுள்ள அரசாங்கம் சட்டமாக்கமாட்டது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட இந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட உத்தேச தனியார் ஓய்வூதிய சட்டத்தை தொழிற்சங்கங்களின் ஆர்பாட்டங்களின் மூலம் வாபஸ் பெறப்பட்டதை போன்று, தகவல் சுதந்திரத்தை சட்டமாக்குவதற்கு போராட வேண்டும் என சுயாதீன ஊடகவியலாளரும் ரைட்ஸ் நௌவ் அமைப்பின் இணை ஏற்பாட்டாளருமான குசால் பெரேரா இன்று தெரிவித்தார்.
போராட்ட அழுத்தங்கள் கொடுக்கப்படும் பட்சத்தில் இந்த சட்டமூலத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்க முடியும் என குசால் பெரேரா தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவினால் முன்வைக்கப்பட்ட தகவல் சுதந்திர தனியார் சட்டமூல பிரேரணை தோற்கடிக்கப்பட்டமையை கண்டிக்கும் முகமாக இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே குசால் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு சுயாதீன ஊடகவியலாளரும் ரைட்ஸ் நௌவ் அமைப்பின் இணை ஏற்பாட்டாளருமான காமினி ஜயசிங்க உரையாற்றுகையில்,
தெற்காசியாவில் இலங்கை தவிர்ந்த ஏனைய அனைத்து நாடுகளிலும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையிலுள்ள அரசாங்கம் தங்களின் அதிகாரத்தை அதிகரிப்பதற்காக 18ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 19ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இச்சட்டத்தை முன்வைத்த போது, நாங்கள் முன்வைக்கின்றோம் என அரசாங்கம் தெரிவித்ததோடு ஆறு மாத காலத்திற்குள் இதற்கான குழுக்களை நியமிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டது.
எனினும் 9 மாதங்கள் கடந்தும் இச்சட்டமூலத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த அரசு ஏமாற்றி வருகின்றது. இந்த சட்டம் நிறைவேற்றப்படாமையினால் மக்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் ஹனா இப்றாஹிம், இலங்கை தமிழ் ஊடகவியாலாளர் ஒன்றியத்தின் பிரதி தலைவர் ஏ.நிக்ஷன், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ஞானசிறி கொத்திகொட, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், தெற்காசிய ஊடகவியலாளர் சங்கத்தின் இலங்கை கிளைத் தலைவர் லக்ஷ்மன் குணசேகர மற்றும் ஊடக ஊழியர்கள் மற்றும் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டாளர் லங்கா பேலி ஆகியோரும் உரையாற்றினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago