Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் குறிப்பாக ஆசியாவில் கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு மிக மலிவான இடங்காக இந்தியாவும் இலங்கையும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஈ.சி. 2011 சர்வதேச நிர்மாண செலவு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர் என்பன ஆசியாவில் நிர்மாணங்களுக்கு அதிக செலவுமிகுந்த இடங்களாக உள்ளன. அவை உலகில் நிர்மாணங்களுக்கு மிக செலவான 20 நாடுகளின் வரிசையில் உள்ளன.
கடந்த 12 மாத காலத்தில் நிர்மாணங்களுக்கான செலவு மேற்கு நாடுகளைவிட ஆசிய நாடுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் செலவுமிகுந்த நாடுகளின் வரிசையில் அதிக ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஹொங்கொங்கில் தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அங்கு நிர்மாண செலவுகள் அதிகரித்துள்ளன என ஈ.சி. ஹரிஸ் நிறுவனத்தின் ஆசிய பிரிவுக்கான விலைகள் மற்றும் வர்த்தக முகாமைத்துவவ தலைவர் டிம் ரொபின்ஸன் கூறியுள்ளார்.
நிர்மாண செலவுகள் அதிகரிக்கும் நிலை இன்னும் சில வருடங்களுக்குத் தொடரும் எனவும்
5 minute ago
12 minute ago
33 minute ago
IBNU ABOO Wednesday, 14 September 2011 03:39 AM
என்ன ஆய்வோ தெரியவில்லை. இலங்கையில் கட்டிடம் கட்டும் செலவை வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு இங்கு செலவு குறைவு என்கிறார்கள் . ஆனால் கட்டிடப்பொருள்களின் செலவும் அதன்கூலியும் இங்கே ஆளைவிளுங்குகிறது என்பதும் எத்தனையோ பேர் கட்டுப்படியாகாமல் கடன்பட்டு வேலையை தொடர்வதா அல்லது பிளானை மாற்றுவதா என்று மண்டையை போட்டு அடிப்பது இவர்களுக்கு தெரியுமா? ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இது பாரமில்லை. நம்மவர்க்கு இது எத்தனை பெரிய பாரம்? காரணம் நம் வருமானம். சும்மாவா சொன்னார்கள் கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்று.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
33 minute ago