2021 மே 15, சனிக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்களை நான் சந்திப்பதை ஈபிடிபியால் தடுக்க முடிந்தது: ரொபட் பிளெக்

Super User   / 2011 செப்டெம்பர் 14 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா,  வடக்கில் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இலங்கைக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச்செயலர் ரொபட் ஓ பிளெக் இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதைத் தெரிவித்தார்.

வடக்கில் வலுவான துணை இராணுவ பிரசன்னத்தைக் கொண்ட அமைப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈபிடிபி) ரொபட் பிளேக் குறிப்பிட்டார்.  'துணை இராணுவக் குழுக்கள் பகிரங்கமாக ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, ஈபிடிபியின் வலிமையை எதிர்கொண்டேன். பல்கலைக்கழக மாணவர்களை நான் சந்திப்பதை அவர்கள் தடுத்தனர்' என அவர் கூறினார்.

'மனித உரிமைகள் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன். துணை இராணுவக் குழுக்களை நிராயுதபாணியாக்குவதன் அவசியம், இதில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடினேன். வடக்கில் தமிழ் பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவது அவசியம். அதனால் இராணுவம் இப்பணிகளை செய்ய வேண்டியிருக்காது' என அவர் கூறினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு ஒழுங்குவிதிகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பன இன்னும் அமுலில் உள்ளதால் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை நடைமுறையில் குறைந்தளவு விளைவையே ஏற்படுத்தும் என தனக்கு தெரிவிக்கப்பட்டப்பட்டதாகவும் ரொபர்ட் பிளெக் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் தீவிரமாக கருத்திற்கொள்வது தமக்கு ஊக்கமளிப்பதாக ரொபட் பிளெக் கூறினார்.
 
அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்த தமது முக்கிய பேச்சுவார்த்தையை தாம் மீள ஆரம்பிப்பகவுள்ளதாக அரசாங்கம், த.தே.கூ. ஆகிய இருதரப்பினரும் கூறியதில்  நான்  மிக மகிழ்வடைந்தேன்' என அவர் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து கருத்துத்தெரிவிக்கையில் , அதன் அறிக்கை வெளிவருதற்குமுன் அந்த ஆணைக்குழு தொடர்பில் தீர்ப்புகூறுவது காலத்திற்கு முந்திய நடவடிக்கையாக அமையும் என்றார்.

எனினும் அந்த ஆணைக்குழுவின் அறிக்கை போதாததாக இருந்தால் சர்வதேச அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை.

'நாம் நண்பர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியவர்களுக்காக நம்பகமான பொறுப்புடைமை செயன்முறையொன்று அவசியம். அது நடைபெறுவதை உறுதிப்படுத்துவத்றகான சில பொறிமுறைகளுக்கான அழுத்தம் இருக்கலாம்.  ஆனால் அது (அத்தகைய அழுத்தம்) தேவையில்லை என நான் எண்ணுகிறேன்' என அவர் கூறினார்.

அதேவேளை கிறீஸ் பூத சம்பவங்களுக்கு முடிவு காண வேண்டும் எனவும் ரொபட் பிளெக் கூறினார்.  இவ்விடயம் ' பாதுகாப்பற்ற உணர்வையை புதிய மட்டத்திற்கு அதிகரித்துள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0

 • AJ Thursday, 15 September 2011 01:25 AM

  இவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் இந்த கோஸ்டிகளிடம் மாட்டிகொண்டு படாதபாடுபடுகிறார்கள்.

  Reply : 0       0

  Nirmalalraj Thursday, 15 September 2011 03:25 AM

  கீறீஸ் பூத விவகாரம் அமெரிக்கா வரை எட்டியிருக்கு...

  Reply : 0       0

  ruban Thursday, 15 September 2011 04:36 AM

  இதுவும் ஈ பி டி பி யின் சின்ன பிள்ளைத்தனமான பூத விளையாட்டுதான் ,எல்லாம் நன்மைக்கே!!

  Reply : 0       0

  S.Abdeen Thursday, 15 September 2011 12:02 PM

  அமெரிக்காதான் இவ்வுலகில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பின்னணி இயக்குனர். தமிழ் மக்கள் இவரின் அனுதாபக் கண்ணீருக்கு ஆட்படவேண்டம். america ivvulahil ilaithu varum innethukku entha manithapa chaddankal moolam nadavadikkai eduppathu?

  Reply : 0       0

  kumar Friday, 16 September 2011 01:19 AM

  Thank you for the understanding Mr.Blake!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .