Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.மேனகா)
"கொழும்பு நகரின் அழகை கெடுக்கும் வகையில் சில பகுதிகள் அமைந்துள்ளன. அவை கொழும்பின் நரகங்களாகவே கருதப்படுகின்றன. இந்த நரகங்களை சுவர்க்கங்களாக மாற்றுவதற்கான அபிவிருத்திப் பணிகள் தற்போது அரசாங்கத்தால் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று ஊடகத்துறை பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இந்நிலையில், கொழும்பு நகரில் குறைந்த வசதி வாய்ப்புக்களுடன் காணப்படும் வீடுகளுக்கு பதிலாக 500 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குறைந்த வசதி வாய்ப்புக்களைக் கொண்டோருக்கான 1000 வீட்டுத் திட்டம் என்ற வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக இந்த 500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்காக 952 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் இந்த 500 வீடுகளில், 320 வீடுகள் கொம்பனித்தெருவிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்காக தெமட்டகொடை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
'அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொழும்பு நகரில் 30ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பது கண்டறியப்பட்டது. இந்த 30ஆயிரம் வீடுகளும் படிப்படியாக நிர்மாணிக்கப்படவுள்ளன. அவற்றில் முதற்கட்டமாகவெ 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இனிவரும் காலங்களில், புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னரே அவற்றுக்கு உரித்துடைய பொதுமக்கள் அவர்களது பழைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்கள் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், புதிய வீடுகள் வழங்கப்படும் வரை தற்காலிக வீடுகளை வழங்கும் நடைமுறையும் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட மாட்டாது.
இதேவேளை. கொழும்பு நகரில், குறைந்த வசதி வாய்ப்புக்களுடன் வசித்து வரும் மக்களுக்களின் நலன் கருதி கழிவு நீர் அகற்றும் நடவடிக்கையை மெருகூட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இதன்பிரகாரம், தெஹிவளை, ரத்மலானை, மொரட்டுவை, கொலன்னாவ, ஜா எல மற்றும் ஏகல பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 15,407 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. இதற்காக 1096 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
16 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
sakeena. Friday, 16 September 2011 12:05 AM
அம்பாறையில் கட்டிய வீடுகளின் சாவிகளை கொடுக்க மறுக்கும் இந்த அரசாங்கம்தான் புது வீடு கட்டும். காதில பூச்சுத்ததிங்க சார். இந்த ஆசை வார்த்தைகள் எல்லாம் தேர்தல் முடியுமட்டும் தான்......
Reply : 0 0
ruban Friday, 16 September 2011 03:47 AM
நரகம் இல்லாமல் நகரமாக வைத்திருந்தாலே போதும்.
Reply : 0 0
ramzeen Friday, 16 September 2011 06:02 PM
சகீனா சரியான விபரத்துடன் போடுங்க. உண்மை உரக்க சொல்லணும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago