2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம் சமூகத்தினரின் குர்பானுக்கு எதிர்க்கவில்லை: மேர்வின் சில்வா

Super User   / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லும்பினி கரந்தன)

அண்மைக்காலமாக மிருக பலிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தொடர்பாடல் மற்றும் பொது உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று வியாழக்கிழமை தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சென்ற போது, முஸ்லிம் சமூகத்தினரால் மேற்கொள்ளப்படும் குர்பானுக்கு எதிராக தான் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேர்வின் சில்வா பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி ஆகியோருடன் தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

இதன் போது, இஸ்லாத்தின் பெயரால்  மேற்கொள்ளப்படும்  குர்பானை நான் ஒரு போதும் தலையீடமாட்டேன் என குறித்த பள்ளிவாசலின் பேஷ் இமாம் அசாத் மௌலான உள்ளிட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் முன்னிலையில் மேர்வின் சில்வா உறுதியளித்தார்.

'இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குர்பானுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. அல்லாஹ்வின் பெயரால் இஸ்லாமியர்களினால் மேற்கொள்ளப்படும்  குர்பானை நான் ஒரு போதும் எதிராக செயற்படமாட்டேன் என அவர் குறிப்பிட்டார்.

'சட்டவிரோதமாக மாடுகளை அறுப்பவர்களின் கைகளையே வெட்டுவேன் என தெரிவித்தேன். சமயங்களுக்கிடையிலான ஒற்றுமை குழப்பும் நடவடிக்கையில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என 1802ஆம் ஆண்டு சிங்கள பெண்மனியினால் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசலிலிருந்து உறுதியளிக்கிறேன்'  என அமைச்சர் மேர்வின் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்தை ஐக்கிய தேசிய கட்சி விமர்சித்து மதங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

பேருவளையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது அமைச்சர் மேர்வின் சில்வா எங்களுக்கு பக்கபலமாக இருந்தாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0

 • Riyal A.M Sunday, 25 September 2011 07:52 PM

  அந்த பயம் இருந்தா சரி....

  Reply : 0       0

  Regan Thursday, 22 September 2011 11:49 PM

  அசாத் சாலி என்கிறவர் UNP ஆள் தானே?
  ஓ இப்ப மற்ற பக்கமா ?
  யார் யாரு எந்தப் பக்கமென்றே தெரியல...

  Reply : 0       0

  Faiz Friday, 23 September 2011 12:23 AM

  அரசியலுக்கு பள்ளியை பயன்படுத்த வேண்டாம்.

  Reply : 0       0

  am.fareed Friday, 23 September 2011 12:35 AM

  Colombo therthal varukinrathu Muslimkalin vakkai perum vakkuruthi ethu.

  Reply : 0       0

  ruzny Friday, 23 September 2011 12:51 AM

  பயந்திட்டார் போலே ....

  Reply : 0       0

  rozan Friday, 23 September 2011 01:09 AM

  நன்றி நண்பா.......உங்களுக்கு அல்லாஹு நேர்வழி இணை காட்டுவானாக ............

  Reply : 0       0

  hamaza Monday, 26 September 2011 06:07 PM

  சும்மா கத்துறார்....

  Reply : 0       0

  red Friday, 23 September 2011 02:19 AM

  சொல்வது மெய்தாதானா?

  Reply : 0       0

  Ossan Salam - Doha Friday, 23 September 2011 02:24 AM

  அமைச்சர் ஒரு இனவாதி அல்ல என்று நமக்கு தெரியும். ஆனாலும் எங்கே அவர் இந்த கருத்தை கூறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனாலும் இப்போது சிங்கள பெண் கட்டிய பள்ளி எனக் கூறுகிறார் கட்டியது பள்ளியையா அல்லது தர்காவையா ?

  Reply : 0       0

  mihwar Friday, 23 September 2011 02:27 AM

  எமது சமூகத்தின் நலன் கருதி அன்று இலங்கை யாப்பில் முஸ்லிம்களுக்கான உரிமைகளை பதிந்த அந்த பெரியார்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்!

  Reply : 0       0

  IBNU ABOO Friday, 23 September 2011 03:19 AM

  முஸ்லிம்கள் போட்ட கோசத்தினாலும் ,மதகடமையில் ஏற்படும் தடைக்கெதிராக நாங்கள் மிக உறுதியாக ஈடுபட இருந்தது இவருக்கு வயிற்ரை கலக்கிவிட்டது . ஆயினும் அமைச்சரின் கருத்துக்கு பாராட்டு .

  Reply : 0       0

  siraj Friday, 23 September 2011 04:13 AM

  நாங்க பயம் இல்லங்கோ மே........... மே........மேர்வின் சாரே.

  Reply : 0       0

  Abdullah Friday, 23 September 2011 05:51 AM

  வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

  Reply : 0       0

  Akkaraipattu Friday, 23 September 2011 07:07 AM

  வணக்கத்திற்கு உரியவன் Allah வை தவிர வேறு யாரும் இல்ல............

  Reply : 0       0

  Jakkoo Friday, 23 September 2011 07:55 AM

  இந்த நியூஸ் படிக்குற நாங்கள் தான் முட்டாள்கள்....

  Reply : 0       0

  rozan Friday, 23 September 2011 09:03 AM

  இது முசம்மில் கொழும்பில் வென்று விடுவாரென்று ஏவப்பட்ட இன்னுமோர் அம்பு......

  Reply : 0       0

  wafar Friday, 23 September 2011 11:27 AM

  இஸ்லாத்துக்கும் இந்த தர்கா வழிபாடுக்கும் எந்த தொடர்பும் இல்லை இஸ்லாமியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த அரசியல்வாதிகளுக்கு ஒருவித மார்க்க அறிவும் இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் அமைச்சருக்கு இந்த சிருக்கு குடிகொண்டிருக்கும் இடத்துக்கு அமைச்சரையும் கூட்டிவருவார்கள்? தன்னை முஸ்லிம் என்று சொல்லிகொண்டாலும் முஸ்லிம் ஆஹமுடியுமா? "நபி நீர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் உமது நன்மையான செயல்கள் யாவும் அழிந்து நீரும் நஷ்டவாளர்களில் ஒருவராகி விடுவீர்! (குரான்)
  கூறிக்கொண்டாலும் முஸ்லிம் ஆஹ

  Reply : 0       0

  Nafeel Friday, 23 September 2011 11:56 AM

  முஸ்லிம்களின் உரிமையை மேர்வின் என்ற ஒரு தனி நபரிடம் பிட்சை கேட்பது போல கேட்கிறார்கள். ஏனெனில் இன்று பள்ளிவாசல்களை காட்சிக்கூடமாக்கி பணம் அல்லவா சம்பாதிக்கிறார்கள்.

  Reply : 0       0

  riyas Friday, 23 September 2011 12:28 PM

  அடிச்சார் பல்டி.

  Reply : 0       0

  mohamed rasith Friday, 23 September 2011 01:07 PM

  நடிகர் - மேர்வின் சில்வா
  திரைகதை, வசனம் - ஆசாத் சாலி
  இயக்கம் - பைசர் முஸ்தபா
  தயாரிப்பு - சிந்தன கம்பெனி

  Reply : 0       0

  BAWA Friday, 23 September 2011 03:46 PM

  ஐயோ ஐயோ...... மேர்வின் குணம் தெரியாமல் ஓட்டும் அரசியல் கூத்தாடிகள்... இப்ப பெரிய குண்டு ஒன்றை போட்டுள்ளார். அதுதான் இந்த பள்ளி சிங்களப் பெண் கட்டியது என.. பின்னர் இது எங்கள் புத்த சிங்களப் பெண் கட்டியது ......எங்களுக்கே உரிமை என கூட்டத்துடன் வந்து கைப்பற்றும்போது என்ன செய்வார்கள்....?

  Reply : 0       0

  hassan Friday, 23 September 2011 04:05 PM

  minister marvin always vt muslim people. thanks 4 our minister.

  Reply : 0       0

  nifras Friday, 23 September 2011 06:52 PM

  எல்லாம் கேட்குறதுக்கு நல்லா இருக்கு. ஆனால் நடக்குதில்லையே.

  Reply : 0       0

  shan Friday, 23 September 2011 08:59 PM

  so if muslims kill the animals treated as religious activity but if hindus do then unlawful?

  Reply : 0       0

  mohamed Friday, 23 September 2011 09:12 PM

  அல்லாஹ் எல்லாவற்றையும் அறிவான். அவனுக்கு அதிகமாக நன்றி செலுத்துவோம்.

  Reply : 0       0

  xlntgsonn Friday, 23 September 2011 09:20 PM

  தமிழ் ஹிந்துக்களில் மிருகபலி ஆகும் ஆகாது என்று இருபிரிவினர் உண்டு. முஸ்லிம்களில் அவ்வாறு இல்லை. ஆகவே மேர்வின்சில்வாவின் இந்த நிலைப்பாட்டைப்பற்றி விமர்சிப்பதில் பொருளில்லை.
  தமிழர்களில் காளி வணக்கம் புரிவோர் எத்தனை விகிதமோ அத்தனை விகிதம் பௌத்தர்களில் தேவால பண்டுறு (உண்டியல்) பிரிவினரும் உண்டு அவர்கள் மேர்வினுக்கு பதில் கூறினால் ஒழிய நமக்கு ஒன்றும் செய்ய இயலாது.
  அரபுலகம் தவிர்த்து உலகில் கப்ருகளை வெள்ளம் மண்சரிவு நாய் நரி தாக்கம் ஆகியவற்றில் நின்றும் காப்பாற்ற எடுத்துக்காட்டலாம் என்கிறவர்களே அதிகம்.

  Reply : 0       0

  lankan Friday, 23 September 2011 10:50 PM

  நல்லத யார் செய்தாலும் நாம் parathuvom

  Reply : 0       0

  sss Friday, 23 September 2011 11:15 PM

  முஸ்லிம் மக்களை எப்படி சரி சமாளித்து கொழும்பு தேர்தலை வெற்றி பெறச்செய்ய வேண்டும் தானே அதற்கு போடுற போடுதான் இது.

  Reply : 0       0

  rozan Saturday, 24 September 2011 03:22 AM

  வபார்,,,,,, நீங்க பெரிய வஹாபி......

  Reply : 0       0

  b.m. rafeek Saturday, 24 September 2011 03:22 AM

  முஸ்லிம்களின் வாக்குகளை பறிக்க ஒரு பல்டி .....

  Reply : 0       0

  siraj Saturday, 24 September 2011 03:54 AM

  கேட்கிறவன் கேனையன் என்றால் ஆடு பறந்த கிழக்குப் பக்கம் என்பானாம்.அப்படித்தான் இதுவும் இருக்கு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .