2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'லங்கா' பத்திரிகை நிர்வாக இயக்குநர் கைது

Super User   / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பாக நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஜே.வி.பியின் 'லங்கா' பத்திரிகை நிர்வாக இயக்குநர் வெநுர நேரத்  கைது செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பிக்குள்இடம்பெறும் பிரச்சினைகளின் பின்னணியில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

வெநுர ஹேரத்தும் மற்றொரு நபரும் நேற்று மாலை மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மாதிவெலயில் இப்பத்திரிகையின் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதியில் வைத்து 900,000 ரூபா பணம் காணாமல் போனதாக வெநுர ஹேரத் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பணம் காணாமல் போனதாக மேற்படி நிர்வாக இயக்குநர் பொலிஸில் புகார் செய்த பின்னர், விடுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருப்பதாக 119 இலக்கம் மூலம் தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X