2021 மே 08, சனிக்கிழமை

இளம் பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு இராணுவ உத்தியோகஸ்தர்கள் இருவருக்கு உத்தரவு

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

இளம் பெண்ணொருவரை முறையற்ற விதமாக தொட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ உத்தியோகஸ்தர்கள் இருவர் 25,000 ரூபாவை நஷ்ட ஈடாக அப்பெண்ணுக்கு வழங்க வேண்டுமெனவும் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டுமெனவும் உத்தரவிட்டு கொழும்பு கோட்டை நீதவான் இன்று தீர்ப்பளித்தார்.

07.02.2011 ஆம் திகதி,  கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் மேற்படி பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி, தனது கட்சிக்காரர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் முறைப்பாட்டாளரிடம் மன்னிப்புக் கோரத் தயார் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் முறைப்பாட்டாளரின் நஷ்ட ஈட்டுக் கோரிக்கையைக் கருத்திற்கொண்ட நீதவான், அவருக்கு 25,000 ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு உத்தரவிட்டதுடன் மன்னிப்பு கோருமாறும் உத்தரவிட்டார். இதன்படி சந்தேக நபர்கள் நீதிமன்றில் பகிரங்கமாக முறைப்பாட்டாளரிடம் மன்னிப்புக் கோரினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X