2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை விமானப்படைக்கு மேலும் இரு சீன விமானங்கள்

Super User   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

இலங்கை விமானப்படையில் இரு சீன விமானங்கள் நேற்று இணைக்கப்பட்டன. மேற்படி எம்.ஏ.60 ரக பயணிகள் விமானங்களை விமானப்படையில் இணைக்கும் வைபவம் இரத்மலானை விமானப்படைத்தளத்தில் நடைபெற்றறது. சீன தூதரகத்தின் முதன்மை செயலர் வாங் ஜிங் பெங் மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹார்ஷா அபேவிக்கிரம ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாக பங்குபற்றினர்.

இரட்டை இயந்திரங்களைக் கொண்ட எம்.ஏ.60 விமானம் 56 பயணிகள் பயணம் செய்யக்கூடியதாகும்.

இவ்விமானங்கள், இலங்கை விமானப்படையின் வர்த்தகப் பிரிவான ஹெலிடுவர்ஸினால் உள்ளூர்விமான சேவைக்கு பயன்படுத்தப்படும்.

வர்த்தக விமான சேவைக்காக இலங்கை விமானப்படை 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளது.

 

 

 

 

காங்கேஸன்துறை, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம்,  பலாலி உட்பட பல இடங்களுககு ஹெலிடுவர்ஸ் விமான சேவை நடத்தப்படுகிறது.

எதிர்காலத்தில்  கிளிநொச்சி, முல்லைத்தீவு, இரணைமடு ஆகிய இடங்களுக்கும் இச்சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது.

 


  Comments - 0

 • meenavan Saturday, 01 October 2011 07:18 PM

  விமானப்படையின் ஹெலிடுவேர்ஸ் வாங்கும் சீன விமானங்கள், சீனா வழங்கும் கடனுதவிகளை ஈடு செய்யும் வகையிலான முயற்சியா? பொதுமகன் வரி உயர்வதற்க்கான வழியே ஒழிய வேறில்லை.

  Reply : 0       0

  ibnu aboo Saturday, 01 October 2011 09:33 PM

  யாருடன் யுத்தம் செய்யவாம். இன்னும் பூரணமான அமைதில் நாடு இல்லை என்று உணர்கிறார்களா , அல்லது சீனாவுக்கு நன்றிக்கடனுக்கு இந்த பணம் வீணாக செலுத்தப்படுகிறதா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X