Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கனேடியப் பிரதமர் ஸ்ரிபன் ஹாபர் சந்தித்து பேசவுள்ளதாக நம்பப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கனேடியப் பிரதமர் சந்திக்கவுள்ளதாக நம்பப்படுகிறது.
'பேர்த் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கனேடியப் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார். மேற்படி விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பமென நான் நினைக்கின்றேன்' என கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி நேற்று தெரிவித்தார்.
சில ஊடகங்களில் தெரிவிக்கப்படுவதுபோன்று கனேடியப் பிரதமர் 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை பகிஷ்கரிக்க மாட்டாரெனவும் அவர் கூறினார்.
'இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்கப்போவதாக கனேடியப் பிரதமர் குறிப்பிடவில்லை. யுத்தத்தின் இறுதி மாதங்களில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் சில சம்பவங்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் அரசியல் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாவிடின் இந்த மாநாட்டில் கலந்துகொள்வது கடினமானதென்றே கனேடியப் பிரதமர் கூறினார். இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு இன்னமும் இரண்டு வருடங்கள் உள்ளன' என புரூஸ் லெவி குறிப்பிட்டுள்ளார்.
3 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago