2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கான தனியார் பாதுகாப்பு ஊழியர்களின் சேவைக்கு தடை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக தனியார் பாதுகாப்பு ஊழியர்களைப் பயன்படுத்துவதையும் அனுமதிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம்  தடை செய்துள்ளதாக  அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்று வியாழக்கிழமை காலை தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற விசேட தேசிய பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

முப்படைகளின் தளபதிகளும் பொலிஸ் மா அதிபரும் இந்த கூட்டத்தில் சமுகமளித்திருந்தனர். (SAJ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--