Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையிலிருக்கும்போது சீருடை அணிந்திருக்க வேண்டுமென்ற பாதுகாப்பு அதிகாரிகளின் தீர்மானத்துக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனரென டெய்லிமிரருக்கு தெரியவந்துள்ளது.
தேர்தல் தினத்தன்று கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து அரசாங்கம் இந்த தீர்மானம் எடுத்ததாக தெரியவருகிறது.
இது பற்றி ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரிடம் கேட்டபோது, பாதுகாப்பு அலுவலர்கள் சில வேளைகளில் 10 தொடக்கம் 15 மணித்தியாலம் வரை தொடர்ந்து கடமையிலிருக்க நேரிடும். அவ்வளவு நேரத்திற்கு சீருடை அணிந்திருப்பது இயலாத காரியமெனக் கூறினார்.
இவர்களிடம் ஒன்று அல்லது இரண்டு சீருடைகளே இருக்கும். அத்துடன், எந்தநேரமும் சீருடை அணிந்திருப்பது கஷ்டமாயிருக்கும். இவற்றை கழுவிப் போடவும் வசதிகள் இல்லை. சில சமயம் நாம் காலையிலிருந்து நள்ளிரவு வரை வேலை செய்வோம். அவ்வளவு நீண்ட நேரம் இந்த அசௌகரியமான சீருடையை அணிந்திருக்க முடியுமாவெனவும் அவர் கேட்டார்.
பிரமுகர்களின் பாதுகாப்பு ஊழியர்களை சீருடை அணியச் செய்வதனால் வன்முறை அரசியல் கலாசாரத்தை அரசாங்கத்தால் ஒழிக்க முடியாதெனவும் அவர் கூறினார். தனது கூட்டாளிகள் பலர் இந்தத் தீர்மானத்தை விரும்பவில்லையென தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொலன்னறுவை அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல்வாதியொருவர் தனது பாதுகாப்பு ஊழியர்கள் சாதாரண உடை அணிய அனுமதிக்கப்படும் வரை தான் பாதுகாப்பு ஊழியர்களை பயன்படுத்தப்போவதில்லையென்ற நிலைப்பாட்டிலுள்ளாரென டெய்லிமிரருக்கு கிடைத்த செய்தி தெரிவித்துள்ளது. (Kelum Bandara)
5 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
45 minute ago
1 hours ago