2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: இலங்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 15 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்து சமுத்திரத்தில் கடற்கொள்ளையில் ஈடுபடும்  சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடுமையான  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஏனைய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பலமான கடற்படைகளை கொண்டுள்ள நாடுகள் தமது புலனாய்வுத் தகவல்களை ஏனைய நாடுகளுடன் பகிர வேண்டுமெனவும் உலக சரக்கு கொள்கலன் போக்குவரத்தில் ஐம்பது சதவீதத்திலும்
அதிகமான பங்கை கொண்டுள்ள இந்;து சமுத்திர பிராந்தியத்தில் கூட்டு ரோந்து நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமெனவும் இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் காலியில் நடைபெறும் பிராந்திய கடல் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.


மாலைதீவு ஜனாதிபதி முகமட் நஸீட் பேசுகையில் தாம் 37 சோமாலிய கடற்கொள்ளையர்கள் அண்மையில் கைதுசெய்தபோதிலும், அவர்களை தண்டிப்பதற்கான சட்டம் தமது நாட்டில் இல்லையெனக் கூறினார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களை இலங்கையும் கைதுசெய்ததாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடற்கொள்ளைகளினால் சர்வதேச கப்பல் போக்குவரத்துத்துறைக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர் வரை ஆண்டு தோறும் நட்டம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

உலக பாதுகாப்பு, உறுதித்தன்மை என்பவற்றை நிலைநிறுத்தும் வகையில் அமெரிக்கா இந்து சமுத்திர பிராந்தியத்தில் கூடுதலான பங்காற்றவுள்ளதாக அமெரிக்க பிரதி உதவி பாதுகாப்பு செயலாளர்களில் ஒருவரான றொபேட் எம்.ஸ்கெர் குறிப்பிட்டுள்ளார்.

இரு தசாப்தங்களாக சோமாலியாவில் சட்டம், ஒழுங்கு ஏதும் இல்லாத நிலையில் ஆயுததாரிகள் சோமாலியாவை கூறுபோட்டு தமது ஆட்புலவர்களாக அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.

கடல் கொள்ளையர்கள் 47 கப்பல்களையும் 500 மாலுமிகளையும் தடுத்து வைத்துள்ளதாக இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் எக்கோ ரெறா இன்ரநஷனல் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது. (AFP)


You May Also Like

  Comments - 0

  • jambavan Tuesday, 15 November 2011 09:54 PM

    கூட்டாக சேர்ந்து மற்றவர்கள் பெயரை சுருட்டிக்கொண்டு போக கூடாது .. எமது கடற்படையே போதும் ...

    Reply : 0       0

    ruban Wednesday, 16 November 2011 03:08 AM

    பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கதை போல இருக்கு !!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .