2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு இன்று

Super User   / 2011 நவம்பர் 18 , மு.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவிக்கவுள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடையும் எல்.ரி.ரி.ஈ. தலைவரகளை சுடுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸுக்கு தெரிவித்ததாக இவ்வழக்கில் சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ. ரி.எம். பி. பீ வராவெவ,எம்.இஸட் ரம்ஸீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரெட்ரிகா ஜேன்ஸ், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட பலர் சாட்சியமளித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .