2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்காக கூடாங்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய அரசு அக்கறை: வைகோ

Super User   / 2011 நவம்பர் 20 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


தமிழகத்தின் கூடாங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படவுள்ள மின்சாரத்தில் ஒரு பகுதியை இலங்கைக்கு வழங்கவுள்ளதால் இம்மின்னுற்பத்தி திட்டத்தில் இந்திய மத்திய அரசாங்கம் மிகுந்த  அக்கறையாக இருப்பதாக மதிமுக தலைவர் வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.

"அத்தீவில் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாட்டு மக்களின் உயிர்களை ஏன் அச்சுறுத்தலுக்குள்ளாக்க வேண்டும்" என அவர் கேள்வி எழுப்பினார்.

"இலங்கைத் தமிழர் விடயத்திலும் முல்லைப் பெரியாறு அணை விடயத்திலும்  ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் அசட்டையாக இருக்கிறது. ஆனால் கூடாங்குளம் அணுமின்சக்தி திட்டத்தில் பெரும் அக்கறையாக இருக்கிறது. இது தமிழ்நாட்டின் நன்மைக்காக அல்ல" என அவர் கூறினார்.

ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்காக மன்னார் வளைகுடாவில் கடலடி மின்சார பரிமாற்றத் தொகுதியை அமைப்பதற்காக  இந்திய மின்சார சபையுடன் இலங்கை மின்சார சபை  2010 ஜீன் 9 ஆம் திகதி ஒப்பந்தமொன்றை செய்தது எனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0

 • neethan Monday, 21 November 2011 12:55 AM

  வைகோ அவர்களே? மத்திய அரசுக்கு தமிழர்களின் படுகொலையை விட அந்நிய செலவாணி முக்கியமானது.

  Reply : 0       0

  manithan Monday, 21 November 2011 01:31 AM

  அந்த மின்சாரம் வழங்கும் திட்டத்தாற் பயனடையப் போவது தமிழர்களே என்பது தெரியாதா?

  Reply : 0       0

  m jaleel kwt Monday, 21 November 2011 02:31 AM

  ஏதோ சும்மா கொடுப்பது போல சொல்றார் வைகோ. இதில் nanmai adaivathu makkal. goverment alla........

  Reply : 0       0

  haleemraja Monday, 21 November 2011 04:52 PM

  ஸ்ரீலங்கா இல்லாட்டி வைகோ அரசியல் பண்ண முடியாது.

  Reply : 0       0

  nath prg Monday, 21 November 2011 05:46 PM

  இனவாதம், மதவாதம், ஜாதி இப்படி ஏதாவது ஒன்றை வைத்து அரசியல் செய்து.. நாளை ஒரு காலம் இலங்கை மக்களும் , இந்திய மக்களும் , பாகிஸ்தான் இந்தியர் போல் ஒருவரை ஒருவர் முறைத்து பார்க்கும் ஒரு கலாச்சாரத்துக்கு இவரைப் போன்றவர்கள்தான் அடித்தளம் இடுகின்றார்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .