2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

தெரிவுக்குழுவுக்கான அரசாங்க உறுப்பினர்கள் அறிவிப்பு

Super User   / 2012 நவம்பர் 08 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அமைச்சர்களான அனுர பிரியதஷ்ன யாப்பா, நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, ராஜித சேனாரத்ன, விமல் விரவன்ச, டிலான் பெரேரா மற்றும் நியோமல் பெரேரா  ஆகியோரையே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நியமித்துள்ளது.

இக்குழுற்கான உறுப்பினர்களின் பெயர்களை ஐக்கிய தேசிய கட்சி ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இதுவரை பெயர்களை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .