2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கை மாணவருக்கு சிறை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கை மாணவர் ஒருவருக்கு 18 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய 'பேத்'தில் வாடகைக் கார் சாரதியாக பணிபுரிந்த வேளையிலேயே அவர் தனது பயணி மீது இந்த குற்றத்தை  புரிந்ததாகக் கூறப்படுகிறது.

மவுன்ட் ஹோத்தோன் என்னும் இடத்தில் கடந்த ஜுலை மாதம் 34 வயது பெண் ஒருவரை காரில் ஏற்றிச்சென்று தான் அந்தப் பெண்ணை துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்தே அவருக்கு 18 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

காரில் மது மயக்கத்தில் கிடந்த இந்தப் பெண் திடீரென விழித்துப் பார்த்தபோது, குறித்த கார் சாரதியான 18 வயதான இலங்கையைச் சேர்ந்த இந்த மாணவன்  தன்னை துஷ்பிரயோகம் செய்துகொண்டிருந்ததை கண்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்தே பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர். 

சந்தேக நபருக்கு 3 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளபோதிலும் தண்டனைக்காலத்தின் அரைவாசியை பூர்த்தி செய்த பின்னர் இவர் நன்னடத்தை உறுதிமொழியின் அடிப்படையில் விடுவிக்கப்படலாம் என்றும்  இதன் பின்னர் அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  (ஏ.பி.சி.நியூஸ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .