2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

சிறையிலிருந்தவாறு வர்த்தகர்களிடம் கப்பம்பெற்ற கைதி; உதவிய பெண் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலையில் இருந்தவாறு தொலைபேசி மூலம் வர்த்தகர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்றுவந்த கைதியொருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் பெண்ணொருவரைக் கைது செய்துள்ளதாகவும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களால் பெறப்பட்டதாகக் கூறப்படும் கப்பப் பணம் வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்திருந்த நிலையில், சுமார் 3 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட மேற்படி பெண்ணின் வங்கிக் கணக்குகளிலேயே கப்பப் பணம் வைப்பிலிடப்பட்டிருந்ததாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .