2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர், தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர்களாக புதிதான நியமனம் பெற்ற நால்வர், இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து தங்களுடைய நியமனக் கடிதங்களைக் கையளித்தனர்.

பங்களாதேஷ், பனாமா, ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலேயே இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், பங்களாதேஷின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக மொஹமட் சப்பிர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பனாமாவின் இலங்கைத் தூதராக அராம் பீ. சிஸ்னெரொஸ் நெய்லர், ரஷ்ய தூதராக அலெக்ஸாண்டர் ஏ. கர்ஷாவா மற்றும் இந்தோனேஷியாவின் இலங்கைத் தூதராக ஹரிமவன் சுயிட்னோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .