2021 ஜனவரி 27, புதன்கிழமை

கஹவத்தை பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறி காலிக்கும் கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிரஞ்ஜன் அபேவர்தன பொலிஸ் தலைமையகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொட்டகெத்தன பொலிஸ் முகாம் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அத்தியட்சகரும் கொட்டகெத்தன கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கஹவத்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ரொஹான் ஒலுகல ஆகிய இருவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
 
இவ்வதிகாரிகள் நால்வரும் கஹவத்தை கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தி வந்தவர்களாவர். இந்நிலையில், காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய வாஸ் குணவர்தன, இரத்தினபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .