2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

சிங்கராஜ வனத்திலிருந்து ஓர்க்கிட் கடத்திய ரஷ்ய தம்பதியினர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கராஜ வனத்திலிருந்து மிக அரிய வகை ஓர்க்கிட்களை கடத்திச் செல்ல முற்பட்ட ரஷ்ய நாட்டு தம்பதியினரை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

75 – 100 வகையான ஓர்க்கிட்களை இவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை சிங்கராஜ வனத்துக்குள் சென்று திரும்பிய மேற்படி தம்பதியினர் மீது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அவர்களின் கைப்பைகளை சோதனையிட்ட போதே அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இதனையடுத்து இவ்விருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .