2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

தெரிவுக்குழு குறித்து எம்.பிக்கள் தகவல்களை வெளியிடக்கூடாது: சபாநாயகர்

Kanagaraj   / 2012 நவம்பர் 17 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்பிரேரணை குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் தெரிவுக்குழு மற்றும் கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பாக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தகவல்களை வெளியிடக்கூடாது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனுர குமார திஸாநாயக்க தெரிவுக்குழு தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள பின்னணியிலேயே சபாநாயகர் மேற்கண்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அறிவுறுத்தினார்.

சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வெளியிட்டுள்ள கூட்ட அறிக்கையிலுள்ள விடயங்களை தவிர கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பாக வேறு எந்தவொரு தகவல்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தக்கூடாது என்றார்.

இதன்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க பிரதம நீதிபதி தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுள்ளார் என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அதற்கும் பொறுப்பானவர்களை அழைத்து அறிவுறுத்துவதாக கூறிய சபாநாயகர் அரசாங்கத்தின் பக்கத்தில் 163 அங்கத்துவர்கள் இருக்கின்ற போதும் குற்றப்பிரேரணையில் கையொப்பமிட்ட 117 நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்திலெடுத்தே தான் தெரிவுக்குழுவின் அங்கத்துவர் தொகையை தீர்மானித்ததாகவும் இது எதிர்கட்சிக்கு சாதகமானது எனவும் சொன்னார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .