2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சபாநாயகரை சந்திக்க சட்டதரணிகளுக்கு அனுமதி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என அச்சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி சஞ்ஜய கமகே தெரிவித்தார்.

இதன் பிரகாரம், எதிர்வரும் 21ஆம் திகதி, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இதில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு மற்றும் சிரேஷ்ஷ சட்டத்தரணிகள் பலரும் கலந்துகொள்வர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். (தசுன் ராஜபக்ஷ)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .