2021 ஜனவரி 27, புதன்கிழமை

ரீட் மனுக்கள் குறித்து உயர்நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நான்கு ரீட் மனுக்கள் தொடர்பிலான வியாக்கியானத்தை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திடம் இன்று கோரியுள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிரான ரீட் மனுக்களை விசாரணைக்கு ஏற்க நேற்று தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதற்காக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவை நியமித்தது.

இந்த மனுக்களை அந்தக் குழு ஆராய்ந்ததன் பின்னரே அது தொடர்பிலான வியாக்கியானத்தை உயர்நீதிமன்றத்திடம் கோரிப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா, ஏ.டபிள்யு.எம்.சலாம் மற்றும் அனில் குணவர்த்தன ஆகியோர் முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது.

ஒழுக்கமின்மை, திறமையின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள குற்றப்பிரேணையை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விசாரணையை தடுக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நிதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் அங்கத்தவர்கள் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .