2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

நீதிமன்றில் சமூகமளிக்குமாறு சபாநாயகர், தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு உத்தரவு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முடிவுகளுக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நியாயாதிக்கம் தனக்கு இருப்பதாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கும் தெரிவுக்குழு அங்கத்தவர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சபாநாயகரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களும் பிரதம நீதியரசரின் உரிமைகளை அவமதிக்கும் வகையில் செயற்படக் கூடாதெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தற்போதைய நிலைமை மற்றும் எந்தவொரு நடவடிக்கையும் குழப்பமானதொரு நிலைமையை தோற்றுவிக்கலாம் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

  Comments - 0

  • meenavan Friday, 21 December 2012 09:05 AM

    நடக்கட்டும் கைறிலுப்பு ...சிந்தனை வெல்லுமா ,நீதி வெல்லுமா.....????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .