2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பிரித்தானிய தொழிலதிபர் இலங்கையில் மரணம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தொழிலதிபரொருவர் வத்தளையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். றிச்சர்ட் வில்கின்ஸன் என்ற 49 வயதுடைய பிரித்தானிய தொழிலதிபரே இன்று மரணமாகியுள்ளார்.

இங்கிலாந்திலிருந்து மாலைதீவுக்கு பயணிக்கும் வழியில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரித்துநின்றபொழுது குறித்த தொழிலதிபருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை வத்தளையிலுள்ள தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராகமை வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி மேற்படி நபரின் மரணம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததில் புற்றுநோய் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது சடலத்தை இங்கிலாந்துக்கு எடுத்துச்செல்ல அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். (தேவபிரிய சந்திரசிறி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .