2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சர்வதேச மத்தியஸ்தம் இன்றி தீர்வு காண முடியாது: சுரேஷ்

Kanagaraj   / 2013 ஜனவரி 01 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சமூகத்தால் மட்டுமே ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர முடியும். அதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்,

சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிரும் ஆற்றல் இன்மையையும் விருப்பமின்மையையும் அரசாங்கம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே சர்வதேச மத்தியஸ்தம் இன்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது முடியாத காரியமாகும்.

சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்வதில் அரசாங்கம் உண்மையான அக்கறையுடன் இருக்குமாயின் அரசாங்கம் 18 ஆவது திருத்தத்தையோ அல்லது திவிநெகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்தையோ கொண்டுவந்திருக்காது என்றார்.

அரசியல் தீர்வை உருவாக்குவதற்காக அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்குபற்றுமா? எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பிரதம நீதியரசருக்கு நடந்ததை பார்த்ததன் பின்னர் பகுத்தறிவுள்ள எவரும் இவ்வாறான செயன்முறைகளை நம்பமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

  Comments - 0

 • Kumar Wednesday, 02 January 2013 03:26 AM

  இப்படியே சொல்லி சொல்லி காலத்தை கடத்துங்கோ

  Reply : 0       0

  Sumathy m Saturday, 05 January 2013 04:36 AM

  1987ஆம் ஆண்டு இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட பொன்னான வாய்ப்பை மமதையினால் குழப்பியடித்துவிட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொன்று தள்ளிவிட்டு, தங்கட பிள்ளையளை வெளிநாடில பாதுகாப்பாக படிக்க அனுப்பிவிட்டு இப்ப வேதாந்தம் பேசுறார் சுரேஷ் ஐயா. ஐயா சொல்லுவது உண்மை என்றால், இனிமேல் அரசாங்கத்துடன் பேசி பிரயோசனமில்லை. அரசுடன் இனிமேல் பேசமாட்டோம் என்று கூறுவாரா? அரசாங்கத்திடம் உரிமையை பெறமுடியாது, ஆனால் சாராயத் தவறனையை மட்டும் பெறலாம்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .