2021 ஜனவரி 23, சனிக்கிழமை

அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் மோதல்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரண, மில்லாவ பகுதியிலுள்ள அழகுசாதனப் பொருட்கள்  உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றைச் சேர்ந்த ஊழியர் குழுவுக்கும் முகாமைத்துவத்துக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக பதற்றமான நிலைமை உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தின்போது நியமிக்கப்பட்ட வெளியாட்களை கம்பனியின் நிரந்தர ஊழியர்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஹொரண வைத்தியசாலையிலும் 8 ஊழியர்கள் பாதுக்கை மற்றும் ஹொமாகம வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக  பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். (புத்திக குமாரசிறி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .