2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஹமில்டன் கால்வாயை புனரமைக்க அரசாங்கம் திட்டம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 08 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்புன் டயஸ்

மேல் மாகாணத்தில் ஆகவும் மோசமாக மாசடைந்த நீர்வழிப்பாதையான ஹமில்டன் கால்வாயை புனரமைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.

இந்த அபிவிருத்;தியின் முதல்படியாக இக்கால்வாயின் 8.7 கிலோமீற்றர் நீளமான பகுதி புனரமைக்கப்படும்.

டச்சுக்காரர்கள் கட்டத்தொடங்கிய இந்த கால்வாயை ஆங்கிலேயர் 1802 ஆம் ஆண்டு கட்டிமுடித்தனர். இது களனி கங்கையில் தொடங்கி நீர்கொழும்பு கடனீரேரியுடன் இணைந்து பின்னர் புத்தளம் கடனீரேரிவரை செல்கின்றது.

மா- ஓயாவிலிருந்து நீர்கொழும்பு கடனீரேரி வரையான 8.7 கிலோமீற்றர் கால்வாய் பகுதியை நிலமீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் புனரமைக்கப்பட்டுள்ளது.

ஹமில்டன் கால்வாயின் எஞ்சிய 14 கிலோமீற்றர் நீளமான பகுதி பின்னர் புனரமைக்கப்படும்.

சகல கால்வாய்களையும் வாவிகளையும் சுத்தம் செய்வதனால்  கால்வாய வழி போக்குவரத்தையும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதுடன் மேல்மாகாணத்தில் காணப்படும் வாகன நெரிசலையும் குறைக்கமுடியும் என்று அரசாங்கம் நம்புகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--