Janu / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சவுதி அரேபியா பிரஜை ஒருவர், விமான பணிப்பெண்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்துள்ளார்.
விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க தயாராகும் போது, விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் தங்களது இருக்கை பெல்ட்கள் அணிந்து தங்கள் இருக்கையில் அமர வேண்டியது அவசியமாகும் சந்தேக நபர் அந்த விதியை மீறி கழிவறைக்குச் செல்ல முயன்ற நிலையில் பணிப்பெண்கள் அவரை தடுத்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பணிப்பெண்கள் இது தொடர்பாக விமானிக்கு அறிவித்ததையடுத்து விமானம் தரை இறக்கிய பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago