2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பொதுநலவாய மாநாட்டுக்கான இடத்தை மாற்றவும்: ஐ.சி.ஜே

Kanagaraj   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாய அமையத்தின் உச்சிமாநாட்டை நடத்துவதற்கான இடத்தினை மாற்றுமாறு சர்வதேச யூரிகள், பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பில் சர்வதேச யூரிகள் அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்துடன்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தையும் இணைத்துள்ளது.

தங்களின் முன்னைய அறிக்கைகளை கருத்திற்கொண்டு 2013 பொதுநலவாய அமைய  தலைவர்களின் உச்சிமாநாட்டை இடத்தினை மாற்றும்படி நாம் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

சட்டவிரோதமாக குற்றப்பிரேரணை செயன்முறை இலங்கையில் மனித உரிமைகளுக்கான மற்றும் சட்டத்தில் ஆட்சி என்பவற்றுக்கான மரியாதை மோசமடைந்து வருவதை கோடிட்டு காட்டியுள்ளது. இந்த போக்கை 'பொறுப்பில்லாத அதிகாரம்'எனும் எமது அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

இப்போதைய சூழலில் இலங்கையை பொதுநலவாய அரசாங்க தலைவர்கள் மாநாட்டை நடத்த அனுமதிப்பது ஜனாதிபதி, சட்டத்துறையின் சுயாதீனம், சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பொதுநலவாயத்தின் அக்கறை பற்றி கடுமையான வினாக்களை எழுப்ப வழிவகுக்கும்.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்படின் எம்முடன் தொடர்புகொள்ள தயவுசெய்து தயங்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--