2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஊடகவியலாளர் சௌகத் அலி மீது துப்பாக்கி சூடு: பிரித்தானியா அதிர்ச்சி

Kanagaraj   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டேலீடர் வாரஇதழின் புலனாய்வு ஊடகவியலாளரான, பராஸ்  சௌகத் அலி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு  பிரித்தானியா கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. அத்துடன் தீவிர கவலையும் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியக் குடியுரிமைபெற்ற ஊடகவியலாளர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளதாவது,

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், சாத்தியமான சகலவற்றையும் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை பிரித்தானியா  கேட்டுக் கொள்கின்றது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் இணைந்து நாமும் பிரார்த்திக்கிறோம்.எமது தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டனர்.தேவைப்பட்டால், அவருக்கு மேலதிக உதவிகளை வழங்கத் தயாராகவே உள்ளோம்.

ஊடகவியலாளர் என்பதனால் தான் அவர் மீது இந்தக் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டேலீடர் வாரஇதழின் புலனாய்வு ஊடகவியலாளரான, பராஸ்  சௌகத் அலியின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நட்டத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

  • Avathanee Sunday, 17 February 2013 11:29 AM

    இலங்கையில் இதெல்லாம் சகஜமப்பா.. தீர்வும் கிடையாது.. நிறுத்தவும் முடியாது..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--