2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

அனுமதி பத்திரத்தை இரத்து செய்யுமாறு உத்தரவு

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கமவைச் சேர்ந்த நபரொருவரிடமிருந்து 200,000 ரூபா பெறுமதியான தூக்க மாத்தரைகள் மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குறித்த மாத்திரைகளை விநியோகம் செய்த விநியோகஸ்தரின் அனுமதி பத்திரத்தை இரத்துசெய்யுமாறும் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த விநியோகஸ்தரின் உறவினர் ஒருவர் கள் வியாபாரி எனவும் ஒருநாளைக்கு 2,500 லீட்டர் கள்ளை உற்பத்தி செய்யும் அவர் கள்ளில் 1000 தூக்க மாத்திரைகளை கலந்து விற்பனை செய்வதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால், அந்த கள்ளை அருந்துபவர்களுக்கு கூடிய போதை உண்டாகின்றது என்று அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் போதையை அதிகரிக்கும் நோக்குத்திடனேயே தூக்க மாத்திரைகளை கள்ளில் கலந்து விற்பனை செய்ததாக தெரியவருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--