2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

'தமிழை இரண்டாம் மொழியாக அறிமுகம் செய்யவும்'

Kogilavani   / 2013 ஜூலை 23 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் கூடுதலாக வசிக்கும் இடங்களிலுள்ள பாடசாலைகளில் பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் போன்று தமிழையும் இரண்டாவது மொழியாக அறிமுகம் செய்யுமாறு வட அமெரிக்கா தமிழர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்து வருகின்றதாக சம்மேளனத்தின் பணிப்பாளர் ஆர்.போர்செழியன் கூறினார்.

இது தொடர்பில் அவர் இந்திய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாவது,

'அமெரிக்க தமிழ் அக்கடமி பல பாடசாலைகளில் தமிழ்மொழி, கலாசாரம் என்பவற்றை கற்பித்து வருகின்றது. இதற்கென பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழியுடன் இசை, சண்டைக்கலை என்பனவும் கற்பிக்கப்படுகின்றன.
45 பாடசாலைகளிலுள்ள 5,000 மாணவர்களுக்கு 500 தொண்டராசிரியர்கள் தமிழ் போhதித்து வருகின்றனர்.

குடிவந்த தமிழர்கள், இளம் தலைமுறையினர் தமது கலாசார பாரம்பரியங்களை பேண வேண்டுமென விரும்புகின்றனர்.
35 வருடங்களுக்கு முன்னரே தமிழ்சங்கங்கள் நிறுவப்பட்டன. 25 வருடங்களுக்கு முன் சம்மேளனம் அமைக்கப்பட்டது.

இந்த சம்மேளனம் பொங்கல், கோடை திருவிழாக்கள், முத்தமிழ் விழா, வசந்த விழா என்பவற்றை கொண்டாடி வருகின்றது.
அமெரிக்க தமிழர்கள் இலங்கையிலுள்ள தமது உறவுகளுடன் ஒத்துழைப்பை பேணி வருகின்றனர். ஆர்ப்பாட்டங்கள் வழியாக அவர்கள் இலங்கை தமிழர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெள்ளை மாளிகை முன் நாம் நடத்திய ஆர்ப்பாட்டம், ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டுவருவதற்கான காரணங்களில் ஒன்றாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X