2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பிரித்தானிய தூதுக்குழு ஜனாதிபதியை சந்திக்காது

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் அரச தலைவருடன் சந்திப்பதற்கு முன்னமே என்னென்ன விடயங்கள் பற்றி பேசப் போகின்றோம் என்ற விடயங்களை இராஜதந்திர அனுகுமுறைகளுக்கு அப்பால் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதையடுத்தே ஜனாதிபதியுடனான சந்திப்பு தவிர்க்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் இலங்கை வந்துள்ளனர். இந்த தூதுக்குழுவினர் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--