2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

குற்றம் சுமத்துவோருக்கு எதிராக நடவடிக்கை: தயாசிறி

Kanagaraj   / 2013 ஜூலை 29 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார

அரசாங்கத்துடன் சேர்ந்துள்ள முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தான் கட்சி மாறுவதற்காக பணம் பெற்றுக்கொண்டதாக கூறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கபோவதாக கூறினார்.

முhகாண சபைகளின் தேர்தலுக்கு முன் அரசாங்கத்துடன் சேர்வதற்கு பல மில்லியன ரூபாவை ஊக்குவிப்பு பணமாக தயாசிறி ஜயசேகர பெற்றுக்கொண்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகேயும், நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்னாண்டடோவும் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிய தயாசிறி ஜயசேகர இவர்களால் முடியுமானால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிரூபிக்குமாறும் அவர் சவால் விடுத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X