2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வடக்கில் பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல்

Super User   / 2013 ஜூலை 31 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஸ்மின், எஸ்.றொசேரியன் லெம்பேட், எஸ்.சிவகருணாகரன், சுமத்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத், ரொமேஷ் மதுசங்க, நவரத்னம் கபில்நாத், எம்.என்.எம். ஹிஜாஸ்


வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல அரசியல் கட்சிகள் இன்று புதன்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர்களாளன சுசில் பிரேமஜயந்த, டக்ளஸ் தேவானந்தா, றிசாட் பதியுதீன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் ஆகியோர் முறையே யாழ். மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்தியநாதன் தவநாதன், அந்தோனிப்பிள்ளை அன்ரன், அன்பழகன், கந்தசாமி பிரகலாதன் ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் கீதாஞ்சலி வேணுகோபால், ஏ.விஜயகிருஷ்;ணன், ரி.தர்மசிறி, மாரிமுத்து மகாதேவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை யாழ். மாவட்டத்திற்கான வேட்புமனுவை மாவட்ட செயலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்துள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி மற்றும் முதன்மை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ். மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை மக்கள் விடுதலை முன்னனியும் தாக்கல் செய்தது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸும் மன்னார் மாவட்டத்திற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது. அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் பொருளாளர் முஹமட் அஸ்லம் ஆகியோர் தாக்கல் செய்தனர்.


மேலும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வேட்புமனுவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி, களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அஸ்லம் ஆகியோர் தலைமையிலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையில்; 7 பிரதான கட்சிகளும் 3  சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன், கட்டுப்பணத்தையும் செலுத்தியுள்ளது.


இதேவேளை, வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று கட்சிகளின் வேட்பு மனுக்கள் இன்று காலை புத்தளம் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும்  ஜனநாயக கட்சி ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் என்பனவே இன்று கையளிக்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X