2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

புதிய இராணுவத்தளபதியிடம் கடமைகள் கையளிப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 31 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவிடம் இராணுவ தளபதிக்கான கடமைகள் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தின் 19 ஆவது இராணுவத்தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுத்தளபதி பதவியிலிருந்து இன்றுடன் ஓய்வு பெற்றுக்கொண்டார்.

இராணுவத் தலைமையகத்தில் வைத்து அவருக்கு அளிக்கப்பட்ட மரியதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுவ தளபதிக்கான கடமைகளை ஒப்படைத்ததுடன் இராணுவ தளபதியின் உத்தியோபூர்வமான வாளையும் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--