2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஜனாதிபதியின் இணைப்பாளராக நியமனம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராக  1996ஆம் ஆண்டு தனது ஊடகப்பணியை ஆரம்பித்த சிவராஜா, மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனம் என்பனவற்றில்   அரசியல் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார்.

அதன் பின்னர் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியராக இதுவரை கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரான சிவராஜா, இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவை மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பவற்றின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

களுத்துறை இங்கிரியவையை பிறப்பிடமாக கொண்ட இவர் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--