2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இலங்கை - இந்திய மீனவர் பேச்சு தாமதத்துக்கு தமிழக அரசே காரணம்: நாராயணசாமி

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 16 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசம் இலங்கை அரசம் தயாராக உள்ளது. ஆனால் தமிழக அரசுதான் இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தி வருகிறது' என்று இந்திய மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று காலை கார் மூலம் ராமேசுவரம் வந்தார். கோவிலுக்கு சென்ற அவர் 22 புனித தீர்த்தங்களில் நீராடிவிட்டு சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தார்.

 'மீன்பிடிக்க செல்லும் தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி படகுகளை சிறை பிடிப்பதும், வலைகளை சேதப்படுத்து வதும் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனையளிக்கிறது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சென்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேசினார். இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பிரச்சினைகள் குறித்த தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமென இலங்கை அதிபர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மீனவர்களும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் உள்ளதாகவும், இந்திய மீனவர்களை பேச்சு வார்த்தைக்கு அனுப்ப நீங்கள்தான் (இந்திய அரசு) நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.

இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் தமிழக அரசுதான் இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தி வருகிறது.

இது குறித்து இலங்கையில் உள்ள வெளிவிவகாரச் செயலாளர், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிமுறைகள் விரைவில் செய்யப்படும்.

ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நான் நாளை டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இது குறித்து பேச உள்ளேன்.

மேலும் டெல்லியில் உள்ள இலங்கை தூதரக தலைமை அதிகாரியை அழைத்து மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதற்கு கண்டனத்தையும் தெரிவிக்க வலியுறுத்துவேன். இந்தியாவின் கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவிப்பதோடு, சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--