2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கொஸ்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திலின ஹெட்டியாராச்சி இடைநிறுத்தப்பட்டுள்ளார். தன் கடமையை செய்யத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களை இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் பிணையில் விடுவித்தார் என்ற குற்றச்சாட்டியிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கம, அஸ்வத்தையில் சட்டத்தை மீறி மாணிக்கக்கல் அகழ்ந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்த ஒன்பது சந்தேகநபர்களும் விசேட அதிரடிப்படையினரால் அக்டோபர் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--