2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இசைக்கச்சேரியில் கல்வீச்சு: இசைக்கருவிகளுக்கு சேதம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துகம, பெலவத்தை மிரஸ்வத்தையில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரியின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் இசைக்கருவிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இசைக்கச்சேரி நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கச்சேரி காலதாமதமாகி ஆரம்பமானதுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்தே ரசிகர்கள் கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இசைக்கச்சேரிக்கு சென்றவர்களிடம் கட்டணம் அறவிடப்பட்டதாகவும் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--