2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பஸ் கட்டண திருத்த விவகாரம்: சட்டமா அதிபருக்கு நோட்டீஸ்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ்.செல்வநாயகம்

தனியார் பஸ் கட்டணங்களில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுத்த தீர்மானத்தை இரத்துசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின் போது மன்றில் ஆஜராகுமாறு சட்டமா அதிபருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை இன்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு உட்படுத்திய போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறே அவருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .