2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

காலாவதியான மருந்துகள் அடங்கிய பெட்டிகள் மீது புதிய லேபல்களை ஒட்டிய இருவர் கைது

Kanagaraj   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சத்துருக்க பிரதீப்

காலாவதியான மருந்துகள் அடங்கிய பெட்டிகள் மீது புதிய லேபல்களை ஒட்டிக்கொண்;டிருந்த இருவரை வலன குற்றச் செயல் பிரிவு பொலிஸார்; சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்தே இவர்கள் இருவரையும் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப பிரிவு, விநியோக பிரிவு மற்றும் வலன குற்றச் செயல் பிரிவும் சேர்ந்து ஒரு தனியார் மருந்து இறக்குமதி கம்பனியில் நடத்திய சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலாவதியாகும் திகதி மாற்றப்பட்ட ஹைட்ரஸோன் பூச்சு மருந்து பெட்டிகள் 4818 ஐ பொலிஸார் கைப்பற்றினர் இதைவிட 10,000 மருந்துப் பெட்டிகளும் பிடிபட்டுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணை நடப்பதாக பொலிஸார் கூறினர். பொதுமக்களும் மருந்தகங்களும் மருந்துகளை கொள்வனவு செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--